ம‌ழைக்கால‌ம்

•November 24, 2010 • 1 Comment

பொடிசுகளெல்லாம் பறக்கவிட்ட காத்தாடியை
 கறந்திழுக்க தெருத்தெருவாய்ச் சுற்றித்திரியும்,

 நடுத்தரமெல்லாம், 
 சாமியப்பன் கடையோரம் ஒதுங்கி,
 உருமாலை, வேட்டி மடிப்பு, அங்கங்கே சொருகி வைத்திருக்கும்
 அலீம் பீடியை இழுக்கும்.
 
 எதிர்ப்ப‌டும் தேரை,த‌வ‌ளைக‌ளைப் பொருட்ப‌டுத்தாது,
 வானைச் சபித்துவிட்டு வேக நடையிடுவோரே!
 பெருசுகள்.

 காங்கேய‌ம் கால்வாயில் விட்ட‌ விரிச‌ல் போல்,
 ஓட்டைப் பிரித்துக் கொண்டொழுகும் நீரைச் சேகரிக்க‌
 பாத்திரம் தேடுவராம் வீட்டு அம்மணிகள்.
  
 ஓலைக் கீற்றின் வழி சொட்டும் மழைத்துளியை ரசித்தபடி,
 கைதாங்கும் சூட்டில் உடனடி டிகாசன் டீ வாங்கி
 அதை மழை நிற்கும் வரையருந்தும்.
 இள‌சுக‌ள்.
 
 ப‌ழுதான‌ சாக்கடையில் எகிறிக்குதித்து
 ஓடியொளியும் எலிக‌ளை துர‌த்தும்
 வெள்ளை க‌ருப்பு பூனைக‌ள்.
 
 நிமிட‌த்திற்கொருமுறை சிலிர்த்துக்கொள்ளும்
 ஆட்டும‌ந்தையினூடே ந‌க‌ர‌ ம‌றுக்கும்
 எருமைக்கோனான் என‌

 ‍‍‍அற்புதமாய் நிகழும் இந்த மழைக்காலத்தை
 அனுபவிக்க, நமக்கு வேண்டும்
 நகரமெல்லாம் மீண்டும் கிராமமாய்.
 

திருநிறைச்செல்வி ப‌வ‌தாரிணிக்கு

•September 22, 2010 • 3 Comments

இருள் சூழ்ந்த மாடத்தில்
ஒளிந்துகொண்டிருக்கும் ந‌ட்ச‌த்திர‌மே,
காலைப் ப‌னியுருக்கும் சூரிய‌க்கீற்றாம்
உன் ம‌ண‌வாள‌னிட‌ம் வெட்க‌மா?

மந்தாரை மலர் வருடும் தென்ற‌லாய் வ‌ருப‌வ‌னை
ம‌ன‌மொத்து வ‌ர‌வேற்கும் உன் வாயிற்ப‌டி.
ஜன்னல் கம்பிகளோடு உறவாடும்
திரை மேலே கடற்கரை குடியமர்ந்திருக்கும்.
ஆங்கே
கணவனின் வருகையை மோப்பம் பிடித்து
எட்டிப் பார்க்கும் உன் கண்கள்.
அவன் நுகர்ந்த காற்றின் வாசம் பறிக்க எத்தனிக்கும் உன் நாசி.

செவியைப் பிளக்கும் சத்ததிலும் கண்டுபிடித்துவிடுவான்
சங்கீதம் படைக்கும் உன் கொழுசொலியை.
நொடிக்கிருமுறை மன்னிப்பு கோறுவான்,
அனுதினமும் உடைக்கப்படும் கண்ணாடி வளையல்கற்கு.
 ‌

உன் திருமணம் போல் வேறு ஒரு நன்னாளும் உண்டா?
ஓரிலையில் இருவர் யாரதிகம் பெறுவர்?
சண்டை வேண்டாம்; சமாதானமும் வேண்டாம்
விட்டுக்கொடுக்க வேண்டாம்; எட்டிப்பறிக்கவும் வேண்டாம்
மாமியார் மெச்சும் மறுமகளே,
க‌விபாடும் காட்டுமைனாவே,
உன் ம‌துர‌மான‌ இசையில்
ம‌ணாள‌ன் ஆன‌ந்த‌க் கூப்பாடு போட‌ட்டும்.
தான் பெற்ற‌ வ‌ர‌ம் த‌ன் தார‌ம் என்று
ஊராரிடத்தில் உரைக்க‌ட்டும்.

நானும் எழுதினேன் காத‌ல் க‌டித‌ம்

•September 15, 2010 • Leave a Comment

 

எதுகை மோனை

பார்த்துப் பார்த்து க‌விதையாய் எழுதிய‌து.

எல்லா உயிர் ந‌ண்ப‌ர்க‌ளாலும்

ப‌டிக்க‌ப்ப‌ட்டு,

உவ‌மைக‌ளும் உருவ‌க‌ங்க‌ளும்

மாற்றிய‌மைக்க‌ப்பட்டது,

சுட்டுப் பெயரைச் சேர்த்து

பெயரெச்ச‌,வினையெச்ச‌ங்க‌ளை இறுதியிலிட்டு,

ஒரு மதிநுட்பமிக்க வ‌டிவுக்கு கொண்டுவ‌ர‌ப்ப‌ட்ட‌து,

அஷ்ட‌மி ந‌வ‌மி கார‌ண‌ம் காட்டி நாட்க‌ளையும்

ராகு காலம் கார‌ண‌ம் காட்டி நேரத்தையும் கடத்தி,

இப்போது

என் 2003ம் வருட நாட்குறிப்பில்

உறங்கிக்கிடக்கிறது- என்

முதல் காதல் கடிதம்.

பேருந்து நிறுத்த‌த்தில்

•September 7, 2010 • Leave a Comment

இடமிருந்து வலம்,

வலமிருந்து இடம்‍-என‌

 விழியுருண்டைகளை உருட்டும் போது

 அவள் பார்வை

என் மீது படட்டும் என்று

நண்பர்கள் கூட்டத்தை விட்டு விலகி நிற்பேன்!

 

பேருந்தின் வருகையை எதிர்நோக்கும்-அவள்

 கண்கள் என்னைக் கடந்து சென்றால்,

உன்னைப் பார்த்துவிட்டாள்,

 இல்லை அது வெறும் பிரம்மை-என‌

 புத்திக்கும் மனசுக்கும் ச‌ண்டை வ‌ந்துவிடும் !

 

இத‌னிடையே எவ‌னோ ஒருவன்

 ந‌ண்ப‌ன் என்று

அவள‌ருகே நின்று கொண்டு

 என் உயிரை எடுப்பான்.

 

அவ‌னை அலாக்காக‌ ந‌க‌ர்த்தி வைக்க‌

 என் ந‌ண்ப‌னுக்கு

க‌ட்டிங் க‌ரைக்ட் பண்ண‌ வேண்டும்!!

 

வ‌ழ‌க்க‌மாய் 5 ம‌ணிக்குத்தான் செல்வாள்,

 என்

நான்கு ம‌ணி பேருந்துக்கு

வ‌ர‌யிய‌லாத‌ கார‌ண‌மாய்

நான்காயிர‌ம் பொய் சொல்ல‌வேண்டும்,

ந‌ண்ப‌ர்களிட‌த்தில்.

 

நாலேகால் பேருந்தில் அவ‌ளேறிவிட்டால்??

அந்தோ, ப‌ரிதாப‌ம் தான்.

 

கூட‌ இரு‍ப்ப‌வ‌னும்

கூட்ட‌ம் நிறைந்த‌ பேருந்தைக் க‌ண்டால்

குதித்தெழுந்து ஓடிவிடுவான்.

 

இதில‌ருமை என்ன‌வென்றால்,

அவ‌ளை விட

 என்னை

அவ‌ள் தோழி தான் அதிகம் க‌வ‌னிப்பாள்!!

 

தோழியின் க‌வ‌ன‌ம் என் மீது இல்லாத‌ போது,

கிள்ள‌ப்ப‌டுவ‌த‌ன் கார‌ண‌ம்

என் மர‌ம‌ண்டைக்கு மெதுவாக‌த்தான் புரிந்தது

 

பலமுறை யோசித்து முடிவில்

அரைமனதோடு கையசைத்து

 அசட்டுப் புன்னகையை விண்ணப்பமிட்டால்

வானையும் பூமியையும் பல முறை அளந்துவிட்டு

 வெற்று முகத்தை ம‌றுமொழியிடுவாள்.

 

5 மணி நெருங்கும் போது

நா வறண்டு நீருக்காக வெளிந‌டப்பு செய்யும்,

 இதயத்துடிப்பு எண்ணூரை எட்டும்.

 

அவளைச் சுமந்து செல்லும்

பேருந்தின் பின்னாலே ஓடிப்போய் ஏறிவிடலாமா?

என்றெல்லாம்  யோசனைவரும்!!

 

 எதிரெதிர் பேருந்து நிறுத்த‌தில்

அறுபது அடி தூரத்தில் நின்று

 பார்த்துக்கொண்டாலும்,

அவ‌ள் அருகாமையை உண‌ராத‌ இர‌வென்று எதுமில்லை.!

இர‌வென்று எதுமில்லை.!!

 

 

 

பட்டிக்காடும் பட்டணமும்

•August 2, 2010 • 1 Comment

.

பம்பாய்காரி நீ

பங்களாப்புதூர்க்காரன் நான் !!

என்ன சீர் கொண்டு வ‌ருவாய் என்

க‌லியுக‌க் காத‌லியே?!

 

அம்மியும் ஆட்டுக்க‌ல்லும் ம‌றுவி

மிக்சியும் கிரைண்ட‌ருமாகிவிட்ட‌ இக் கால‌த்தில்

என்ன‌ சீர் கொண்டு வ‌ருவாய்?

 

வீடு கூட்டி விட‌ ஈச்ச‌ஞ்சீமாறு,

வாயிற் பெருக்க‌ க‌ட்டைச்சீமாறு.

வாச‌ல் இல்லாத‌ உன் வீட்டில்

வாக்குவ‌ம் கிளீன‌ரின் ராஜ்ஜிய‌ம்!

 

வாசிங்மெசின் ப‌ற்றிச் சொல்ல

வார்த்தைக‌ள் இல்லை.

பத்தோடு பதினொன்றாய் தேவைப்பட்டால்

என்னையும் சேர்த்து துவைக்கும் அந்த ஜந்து.

 

ஆலமரத்தடியில் அமோகமான காற்றில்,

படுத்தால் தூங்கிய நேரம் தெரியாது.

காற்றுக்கு கைமாற்றாய் ஃபேனும் ஏசியும்.

தூக்க‌த்திற்கு எதை மாற்ற‌ப் போகிறாய்?

 

இதோ வ‌ந்துவிட்ட‌து நான்ஸ்டிக் ப‌னியார‌க் க‌ல்!.

அதிலே நான்கைந்து வாங்கி வ‌ந்துவிடு.

 

ஓட‌ம‌ண்ணும் உமிச்சாம்ப‌லும்

அற‌வே இல்லாத‌ இந்த‌ ஊரில்

காலம் தள்ள‌

‘விம்’பாரையும் ப‌ட்டிய‌லில் சேர்த்துக்கொள்.

 

 
Follow

Get every new post delivered to your Inbox.