பட்டிக்காடும் பட்டணமும்
.
பம்பாய்காரி நீ
பங்களாப்புதூர்க்காரன் நான் !!
என்ன சீர் கொண்டு வருவாய் என்
கலியுகக் காதலியே?!
அம்மியும் ஆட்டுக்கல்லும் மறுவி
மிக்சியும் கிரைண்டருமாகிவிட்ட இக் காலத்தில்
என்ன சீர் கொண்டு வருவாய்?
வீடு கூட்டி விட ஈச்சஞ்சீமாறு,
வாயிற் பெருக்க கட்டைச்சீமாறு.
வாசல் இல்லாத உன் வீட்டில்
வாக்குவம் கிளீனரின் ராஜ்ஜியம்!
வாசிங்மெசின் பற்றிச் சொல்ல
வார்த்தைகள் இல்லை.
பத்தோடு பதினொன்றாய் தேவைப்பட்டால்
என்னையும் சேர்த்து துவைக்கும் அந்த ஜந்து.
ஆலமரத்தடியில் அமோகமான காற்றில்,
படுத்தால் தூங்கிய நேரம் தெரியாது.
காற்றுக்கு கைமாற்றாய் ஃபேனும் ஏசியும்.
தூக்கத்திற்கு எதை மாற்றப் போகிறாய்?
இதோ வந்துவிட்டது நான்ஸ்டிக் பனியாரக் கல்!.
அதிலே நான்கைந்து வாங்கி வந்துவிடு.
ஓடமண்ணும் உமிச்சாம்பலும்
அறவே இல்லாத இந்த ஊரில்
காலம் தள்ள
‘விம்’பாரையும் பட்டியலில் சேர்த்துக்கொள்.
.

romba nalla irukku