நானும் எழுதினேன் காதல் கடிதம்
எதுகை மோனை
பார்த்துப் பார்த்து கவிதையாய் எழுதியது.
எல்லா உயிர் நண்பர்களாலும்
படிக்கப்பட்டு,
உவமைகளும் உருவகங்களும்
மாற்றியமைக்கப்பட்டது,
சுட்டுப் பெயரைச் சேர்த்து
பெயரெச்ச,வினையெச்சங்களை இறுதியிலிட்டு,
ஒரு மதிநுட்பமிக்க வடிவுக்கு கொண்டுவரப்பட்டது,
அஷ்டமி நவமி காரணம் காட்டி நாட்களையும்
ராகு காலம் காரணம் காட்டி நேரத்தையும் கடத்தி,
இப்போது
என் 2003ம் வருட நாட்குறிப்பில்
உறங்கிக்கிடக்கிறது- என்
முதல் காதல் கடிதம்.
Advertisement
